வெளியிடப்பட்ட நேரம்: 22:28 (17/05/2018)

கடைசி தொடர்பு:22:28 (17/05/2018)

முள்ளிவாய்க்காலில் முற்பகல் 11 மணிக்கு நினைவேந்தல் - ஏற்பாடுகள் தீவிரம்!

முள்ளிவாய்க்கால்

இலங்கை அரசுப் படைகளால் ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் கடற்கரையில் ஒன்பதாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுகிறது. ஈழத்தமிழர்களின் தாயகப்பகுதியான வடக்கு, கிழக்கு இலங்கை மாகாண மக்கள் அனைவரும் இந்நிகழ்வில் பங்கேற்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

முள்ளிவாய்க்கால்

முள்ளிவாய்க்கால் கிழக்குப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் இடத்தில், நாளை (மே 18) முற்பகல் 11 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றப்படும். உறவுகளைப் பறிகொடுத்த முதிய தாயார் ஒருவரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சுடரைத் தர, அவர் அதை ஏற்று மையச் சுடரை ஏற்றுவார். அதை ஏற்றிமுடித்ததும் பொதுமக்கள் மற்ற சுடர்களை ஏற்றுவார்கள். 

முள்ளிவாய்க்கால்

இந்நிகழ்வுக்காக யாழ்ப்பாணத்திலிருந்து 6 பேருந்துகளும் வவுனியாவிலிருந்து 4 பேருந்துகளும் மன்னாரிலிருந்து 5 பேருந்துகளும் கிளிநொச்சியிலிருந்து 3 பேருந்துகளும் முல்லைத்தீவிலிருந்து 10 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன என முதலமைச்சர் விக்கினேசுவரன் தெரிவித்துள்ளார்.