`எந்த வேலைக்கும் விண்ணப்பிக்கும் எண்ணமில்லை!’ - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரகுராம் ராஜன்

இங்கிலாந்தின் தலைமை வங்கியான பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் இயக்குநர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் மறுத்துள்ளார்.

ரகுராம் ராஜன்

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன், தனது பதவிக்காலம் முடிந்த பிறகு அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியராகப் பணிபுரிந்துவருகிறார். அங்கு  பணிபுரிந்தாலும் வங்கிகள் தொடர்பாக அவ்வப்போது தனது கருத்துகளைத்  தெரிவித்துவந்தார். லண்டனை தலைமையிடமாகக்கொண்டு, இங்கிலாந்தின் தலைமை வங்கியாக இயங்கும் பேங்க் ஆஃப் இங்கிலாந்து வங்கியின் கவர்னராக தற்போது மார்க் கார்னே உள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த வருடம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், பேங்க் ஆஃப் இங்கிலாந்து கவர்னர் பதவிக்கு ரகுராம் ராஜன் விண்ணப்பித்துள்ளதாக சமீப காலமாகச்  செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. 

இந்தச் செய்திக்கு தற்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார் . இதுகுறித்து அவர் கூறுகையில்,  ``தற்போது நான் சிகாகோ பல்கலைக்கழகத்தில் நல்ல வேலையில் இருக்கிறேன் . நான் எங்கே இருந்தாலும் மகிழ்ச்சியாக இருப்பேன். எந்த வேலைக்கும் நான் விண்ணப்பிக்கவில்லை. அந்த எண்ணம் எனக்கு இல்லை. உண்மையில் நான் ஒரு கல்வியாளன்தான். தொழில்முறை வங்கியாளன் கிடையாது" என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!