வெளியிடப்பட்ட நேரம்: 09:28 (18/05/2018)

கடைசி தொடர்பு:09:56 (18/05/2018)

காருக்கு ஃபேன்ஸி எண் வாங்க 16 லட்சம்..!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர், அவருடைய காருக்கு ஃபேன்ஸி எண் வாங்க 16 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார். 

ஃபேன்ஸி நம்பர் கார்

கார், பைக்குகளை விரும்பி வாங்கும் கோடீஸ்வரர்கள் பலர் அந்தக் காருக்கு, விருப்பப்பட்ட ஃபேன்ஸி எண் வாங்குவதற்கு அதிக அளவில் பணம் செலவுசெய்வார்கள். அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், ராகுல் தனிஜா என்ற தொழிலதிபர்.  அவர், சமீபத்தில் 1.50 கோடி ரூபாய் மதிப்புள்ள கறுப்பு நிற ஜாக்குவார் கார் வாங்கியுள்ளார். அந்தக் காருக்கு ஃபேன்ஸி எண் பெறுவதற்கு, ஒன்றரை மாதம் வரை காத்திருந்தார். பின்னர், 16 லட்ச ரூபாய் செலவுசெய்து, "RJ 45 CG 0001" என்ற எண்ணைப் பெற்றுள்ளார். அவருடைய கார்கள் அனைத்தும் 0001 என்ற எண்ணில்தான் உள்ளன.