வெளியிடப்பட்ட நேரம்: 11:32 (18/05/2018)

கடைசி தொடர்பு:12:59 (18/05/2018)

ஹைதராபாத்துக்குப் பறந்த கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள்..!

கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள், தங்குவதற்காக ஹைதராபாத்துக்குச் சென்றுள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு வெளிவந்த நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் - ம.ஜ.த ஆகிய கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியில், 117 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு அந்தக் கூட்டணிக்கு இருந்தது. ஆனால், 104 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட பா.ஜ.க-வைச் சேர்ந்த எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

அதையடுத்து, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ-க்கள், பெங்களூருவிலிருந்த ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், எடியூரப்பா நேற்று முதல்வராகப் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த எம்.எல்.ஏ-க்களை கேரளாவுக்கு மாற்ற கட்சித் தலைமை முடிவுசெய்தது. நேற்று இரவு அவர்கள், விமானம் மூலம் கேரளா செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள் பேருந்து மூலம் ஹைதராபாத் சென்றனர். அங்குள்ள தாஜ் கிருஷ்ணா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தெலங்கானா மாநில காங்கிரஸ் தலைவர் உத்தம் குமார் ரெட்டி ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.