வெளியிடப்பட்ட நேரம்: 13:13 (18/05/2018)

கடைசி தொடர்பு:15:40 (18/05/2018)

குட்கா விவகாரத்தில் சி.பி.ஐ விசாரணைக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு..!

குட்கா விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ விசாரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடிசெய்தது. 

உச்ச நீதிமன்றம்

தமிழகத்தில், தடைசெய்யப்பட்ட குட்கா தொடர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்குத் தொடர்பு இருக்கிறது என்று தி.மு.க சார்பில் தொடர்ச்சியாகக் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டனர்.

சி.பி.ஐ விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சிவகுமார் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். அந்த வழக்கு, இன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பாலி நாரிமன், கவின்கர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'குட்கா தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரிக்கத் தடையில்லை' என்று கூறி, சிவகுமாரின் மனுவைத் தள்ளுபடிசெய்தனர்.