வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (18/05/2018)

கடைசி தொடர்பு:14:30 (18/05/2018)

கடும் சர்ச்சைகளுக்கு நடுவே தேவகவுடாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!

கர்நாடகாவில் நடைபெறும் சர்ச்சைகளுக்கு நடுவே இன்று பிரதமர் மோடி, ம.ஜ.த தலைவர் தேவகவுடாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் நடந்த தேர்தல் முடிவால் பா.ஜ.க-வுக்கும் ம.ஜ.த-வுக்கும் இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. இருகட்சிகளும் ஆட்சிபைப் பிடிக்க கடும் போட்டியில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க-வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்ததால் இந்த இரு கட்சிக்கும் இடையே இருந்த போட்டி மோதலாக மாறியுள்ளது.

கர்நாகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் ம.ஜ.த ஆட்சியமைக்கும் என எதிர்பார்த்த நிலையில் பா.ஜ.க-வை ஆளுநர் அழைத்தது இந்த இரு கட்சிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆளுநரின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் ம.ஜ.த ஆதரவாளர்கள், தலைவர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் நேற்று கர்நாடகச் சட்டசபை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ம.ஜ.த தலைவர் தேவகவுடாவும் கலந்துகொண்டார். 

இந்த இரு கட்சிகளுக்குமிடையே கடும் போட்டி உள்ள நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் தேடகவுடாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மோடி, `முன்னாள் பிரதமர் தேவகவுடாவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தேன். அவர் நீண்ட ஆயுள் மற்றும் நல்ல உடல் நலத்துடணும் வாழ பிரார்த்தனை செய்கிறேன்” எனப் குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் பெரும் பேச்சுப் பொருளாக மாறியுள்ளது.