முதல்வருக்கு பாராட்டு மழை பொழியும்போது அமைச்சருக்கு ரோலிங்..! கலகலத்த மலர் கண்காட்சி!

ஊட்டி மலர் கண்காட்சியில், முதல்வர் குறித்து பாராட்டும்போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு ரோலிங்.

ஊட்டி மலர் கண்காட்சியில், முதல்வர் குறித்து பாராட்டும்போது அமைச்சர் துரைக்கண்ணுக்கு ரோலிங் ஆகிவிட்டது.

அமைச்சர் துரைக்கண்ணு

நீலகிரி மாவட்டம், உதகையில் மலர் கண்காட்சியை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, துரைக்கண்ணு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, காவிரி விவகாரம் போன்றவற்றில் முதல்வரின் பணிகள் குறித்து பாராட்டிவிட்டு, சேலம் தந்த மாம்பழம், சேலம் தந்த வைரம் என்று முதல்வருக்கு பாராட்டு மழை பொழிந்துகொண்டிருந்தார். ஒரு கட்டத்தில், எடப்பாடி பழனிசாமியை, `சேலம் தாத்தா’ எனத் துரைக்கண்ணு கூறிவிட்டார். பின்னர், சுதாரித்துவிட்டு, தனது உரையை துரைக்கண்ணு தொடர்ந்தார். அவர், சேலம் தந்த மாணிக்கம் என்று சொல்ல வந்தார். ஆனால், சற்றே தடுமாறி சேலம் தாத்தா எனக் கூறிவிட்டார்.

இந்நிலையில், துரைக்கண்ணுவின் கருத்துகளைப் பதிவிட்டு, சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். முன்பு, "முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டும்தான் ரோலிங் ஆச்சு.. இப்ப அவரைப் பற்றி பேசுபவர்களுக்கும் ரோலிங் ஆகிறது" என ஸ்டேட்டஸ்களை நெட்டிசன்கள் தட்டி வருகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!