வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (18/05/2018)

கடைசி தொடர்பு:20:11 (18/05/2018)

சேலம் மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக ஜோர்ஜி ஜோர்ஜ் பதவியேற்பு!

சேலம் மாவட்டத்தின் புதிய எஸ்.பி-யாக ஜோர்ஜி ஜோர்ஜ் பதவியேற்றுக்கொண்டார்.

ஜார்ஜி ஜோர்ஜ்

சேலம் மாவட்ட எஸ்.பி-யாக இருந்தவர் ராஜன். இவர் சென்னை ஒருங்கிணைந்த குற்றப் புலனாய்வுப் பிரிவு எஸ்.பி-யாக மாற்றப்பட்டதையடுத்து சென்னை ரயில்வே எஸ்.பி-யாக இருந்த ஜோர்ஜி ஜோர்ஜ் இன்று சேலத்தின் 61வது எஸ்.பி-யாக பதிவுயேற்றுக் கொண்டார்.

பதவியேற்ற பிறகு அவர் பேசும்போது, ``காவல் நிலையங்களுக்குப் புகார் தர வரும் பொதுமக்களிடம் உடனே மனு பெற்று அதன்மீது உரிய நடவடிக்கைகள் விரைந்து எடுப்பக்கப்படும். சில பகுதிகளில் கடைகளில் வைத்து மதுபானம் விற்பதாகத் தெரியவந்துள்ளது. அவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க உத்தரவிடுவேன். சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் குற்றங்கள் நடைபெறாமல் செய்யவும் அனைத்து பகுதிகளிலும் தீவிர ரோந்து செல்லவும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

குற்ற வழக்குகளில் தீவிர விசாரணை செய்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தரப்படும். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரவுடிகளை கண்காணித்து அவர்களைக் கைது செய்யவும் உத்தரவிடப்படும். சேலத்தில் லாட்டரி அதிகமாக விற்கப்படுவதாகத் தெரியவருகிறது. விற்பவர்களைக் கண்டறிந்து அவர்கள்மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்றார்.