தூத்துக்குடியில் கடைச் சுவரில் துளையிட்டு 100 சவரன் நகைக் கொள்ளை..! | 100 pounds golden jewelry and 10 kg silver materials are theft in thoothukudi

வெளியிடப்பட்ட நேரம்: 11:18 (19/05/2018)

கடைசி தொடர்பு:11:55 (19/05/2018)

தூத்துக்குடியில் கடைச் சுவரில் துளையிட்டு 100 சவரன் நகைக் கொள்ளை..!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள நகைக்கடையின் சுவரை துளைபோட்டு, கடையில் இருந்த 100 பவுன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளி கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அரசு மருத்துவமனை எதிரில் உள்ள நகைக்கடையின் சுவரை துளைபோட்டு, கடையில் இருந்த 100 சவரன் நகை மற்றும் 10 கிலோ வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

golden jewelry theft in thoothukudi

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பெரிய கிணறு தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்ராஜா. இவர், எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு எதிர்புறத்தில், விஜயலெட்சுமி ஜூவல்லர்ஸ் என்ற பெயரில் நகைக்கடை வைத்துள்ளார். இவரது நகைக்கடையின் பின் பகுதியில் தனியார் லாட்ஜ் ஒன்று உள்ளது. இன்று அதிகாலையில் கடைக்குப் பின்புறம் உள்ள லாட்ஜில் ஒரு அறை திறந்து கிடப்பதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் எட்டயபுரம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

போலீஸார் லாட்ஜ் அறையை சோதனை செய்தபோது, அறையின் சுவர் துளை போடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத் தொடர்ந்து போலீஸார், நகைக்கடை உரிமையாளருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர், கடையின் முன் பகுதியைத் திறந்து பார்த்தபோது கடையில் இருந்த இரும்புப் பெட்டி வெல்டிங் மூலமாக உடைக்கப்பட்டிருந்தது. பெட்டிக்குள் வைக்கப்பட்டிருந்த 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ மதிப்புள்ள வெள்ளிப் பொருள்கள் கொள்ளையடிக்கபட்டிருந்தது தெரியவந்தது. மேலும், கடைக்குள் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான ஹார்ட்டிஸ்க் உள்ளிட்டவையும் திருடப்பட்டிருந்தன.

theft in jewelry shop

சுவரில் துளைபோட்டு நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மார்ச் 21-ம் தேதி, தற்போது நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட நகைக்கடையின் அருகில் உள்ள  ஆறுமுகம் ஜூவல்லரி என்ற மற்றொரு நகைக்கடையின் பூட்டும் உடைக்கப்பட்டு 60 சவரன் தங்க நகைளும் ரூ.25,000 பணமும் திருடப்பட்டது. இதுவரை அந்த கொள்ளை வழக்கில் யாரும், கைது செய்யப்படாத நிலையில், இரண்டே மாதங்களில் அப்பகுதியில் மீண்டும் நடைபெற்றுள்ள இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மற்றும் மக்களிடையே அச்சத்தினையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க