இமயமலையில் ரஜினி பட ஷூட்டிங்

பயங்கர உற்சாகத்தில் இருக்கிறார் ரஜினி ரசிகன், ஸாரி... கார்த்திக் சுப்புராஜ். சன் டிவி பிக்சர்ஸ் தயாரித்து, ரஜினி நடிக்கும் படத்துக்காக நட்சத்திர தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ரஜினி

ரஜினி படத்தில் இடம்பெறும் வெவ்வேறு கதாபாத்திரங்களுக்காக இதுவரை 40-க்கும் மேற்பட்ட நடிகர்களை வரவழைத்து கேரக்டர் செலக்‌ஷன் நடத்தி முடித்துவிட்டார் கார்த்திக் சுப்புராஜ். ஏற்கெனவே, மும்பை தாராவி செட்டை சென்னையிலேயே அமைத்து 'காலா' படத்தை முடித்துவிட்டனர். அடுத்த படத்துக்கு செட்டை தவிர்த்து இந்தியாவின் முக்கியமான பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ரஜினி நடிக்கும் காட்சிகளைப் படமாக்கத் திட்டமிட்டு வருகிறார் கார்த்திக் சுப்புராஜ். நேபாளத்தின் தலைநகரான காட்மண்ட், ரஜினியின் ஃபேவரைட் பிரதேசமான இமயமலையிலும் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளை சன் பிக்சர்ஸ் நிறுவனம் செய்து வருகிறது. முக்கியமாகப் படப்பிடிப்பு  நடத்தப்போகும் காட்மண்ட், இமயலையில் உள்ள இடங்களைப் பார்த்து தேர்வு செய்வதற்காக டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் தன்னுடன் கேமராமேன் திருவையும் அழைத்துச் சென்றிருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!