விருதுநகர் சந்தேக மரணங்கள் விவகாரத்தில் சி.பி.சி.ஐ.டி விசாரணை! உயர் நீதிமன்றம் உத்தரவு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த ஆண்டு போலீஸ் காவலில் இருந்த...

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கடந்த ஆண்டு போலீஸ் காவலில் இருந்த ஞானசேகர், திலகராஜ் ஆகியோர் மரணமடைந்த சம்பவத்தில் சந்தேகம் உள்ளது என்று அப்பகுதி மக்கள் நியாயம் கேட்டு போராட்டங்கள் நடத்தினார்கள். இருவர் மரணமும் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், அவர்களின் உறவினர்கள் மனுத்தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, அவ்வழக்கை சி.பி.சி.ஐ.டி போலீஸ் விசாரணைக்கு மாற்றி  உத்தரவிட்டுள்ளது. 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நடுசூரக்கோட்டையைச் சேர்ந்த ஞானசேகர் மற்றும் திலகராஜ் இருவரும் 2017-ம் ஆண்டு நவம்பர் 20-ம் தேதி வேலைக்காக வீட்டைவிட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. இருவரும் சடலமாக அரசு மருத்துவமனையில்  வைக்கப்பட்டு இருந்தனர். இதைப்பார்த்து அவர்களுடைய உறவினர்களும் ஊர் மக்களும் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இருவரின் மரணம் குறித்து வச்சகாரபட்டி காவல் நிலைய ஆய்வாளர் வழக்கு பதிவு செய்தனர். இதுகுறித்து, விருதுநகர் டி.எஸ்.பி மேற்பார்வையில் விசாரணை நடைபெற்றது. மணல் திருட்டில் ஈடுபட்டிருத்தவர்களைப் பிடிக்க முயன்றபோது, வயலில் அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் மிதித்ததால், மின்சாரம் தாக்கி இருவரும் உயிரிழந்ததாகக் காவல்துறை கூறியது. இதை நம்ப மறுத்து மர்ம மரணமடைந்த ஞானசேகரின் மனைவி மாரியம்மாள், திலகராஜ் மனைவி ஆனந்தசெல்வி ஆகியோர் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அவ்வழக்கை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!