`ஆர்கெஸ்ட்ரா பார்க்கப் போன குடும்பத்திற்கு நடந்த சோகம்!’ - தொடர் கொள்ளையால் மிரளும் மக்கள்

அரியலூரில், வீட்டின் கதவை உடைத்து 92 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. மாவட்டத்தின் தொடர் கொள்ளைச் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உறைந்திருக்கிறார்கள். இது, வட மாநிலத்தவர்களின் கைவரிசையா என போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

                               

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னப்பா. இவர், கடந்த 15 ஆண்டுகளாக சிங்கப்பூரில் வேலை செய்துவருகிறார். இவரது மனைவி தில்லைநாயகி, மகன் தினேஷ் ஆகியோர் நாகல்குழி கீழத்தெருவில் உள்ள அவர்களது வீட்டில் வசித்துவருகின்றனர். 

இரவு, திரௌபதை அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆர்கெஸ்ட்ரா நடைபெற்றது.  அதைக் காண தில்லைநாயகி மற்றும் அவர்களது மகன் தினேஷ் ஆகியோர் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளனர். இதை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்புறம் கதவை உடைத்து உள்ளே புகுந்து, பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 92 சவரன் நகை மற்றும் ரூ.10ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துவிட்டுத் தப்பி ஓடிவிட்டனர். 

                             

ஆர்கெஸ்ட்ரா முடிந்து வீடு திரும்பிய தில்லைநாயகி, வீட்டின் பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைக் கண்டு அலறினார்.

                                            

இதையடுத்து, அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் இரும்புலிக்குறிச்சி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கே வந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி கென்னடி மற்றும் காவல்துறையினர், கொள்ளை நடந்த இடத்தைப் பார்வையிட்டனர். திருவிழா நேரத்தில் இந்தத் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை வலைவீசித் தேடிவருகின்றனர். மேலும், இவரது மகள் தீபாவுக்கு கடந்த ஜனவரி மாதம் திருமணம் ஆனநிலையில், அவரது நகைகளைப் பத்திரமாக வைத்திருக்க அம்மா வீட்டில் கொடுத்து வைத்திருந்தார். அந்த நகைகளும் கொள்ளைபோனது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!