`முதல்வருக்கு பகிரங்கக் கொலை மிரட்டல்!’ - ராக்கெட் ராஜா ஆதரவாளரின் பரபரப்பு ஆடியோ

முதல்வருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த ராக்கெட் ராஜாவின் ஆதரவாளரைப் பிடிக்க நெல்லை காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.இது தொடர்பாக வெளியான ஆடியோவில் முதல்வருக்கு மட்டும் அல்லாமல் நெல்லை எஸ்.பி-க்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.

முதல்வருக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த ராக்கெட் ராஜா ஆதரவாளரைப் பிடிக்க நெல்லை காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இது தொடர்பாக வெளியான ஆடியோமூலம் முதல்வர் மற்றும் நெல்லை எஸ்.பி-க்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால், பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

ராக்கெட்ராஜா -ஆதவாளர் ஆடியோ

பாளையங்கோட்டை அண்ணா நகரைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் செந்தில்குமார் என்பவர், பிப்ரவரி 26-ம் தேதி வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலைசெய்யப்பட்டார். இந்த வழக்கில், ஏற்கெனவே 9 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், சென்னையில் வேறொரு வழக்கில் கைதுசெய்யப்பட்ட நாடார் மக்கள் சக்தி இயக்கத் தலைவரான ராக்கெட் ராஜாவை இந்த வழக்கில் நெல்லை காவல்துறை கைதுசெய்தது. அவரை கோவை சிறையில் இருந்து அழைத்துவந்து, போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். 

இதனிடையே, ராக்கெட் ராஜா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து  நெல்லையை அடுத்த தாழையூத்து பகுதியில் கடந்த 15-ம் தேதி அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீவைத்தனர். பயணிகளைக் கீழே இறங்கச் சொல்லிவிட்டு, தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஜோசப், ஆனந்த் ஆகிய இருவரைக் கைதுசெய்த போலீஸார், அவர்களை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.  

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் பதற்றத்தைத் தூண்டும் வகையில் வன்முறையில் ஈடுபடத் திட்டமிட்டவர்களை போலீஸார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைதுசெய்துவருகிறார்கள். இதுவரை 30-க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்ட நிலையில், சமத்துவ மக்கள் கட்சியின் வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளரான எட்வின் துரைராஜ், புளியங்குடி நகரச் செயலாளர் எஸ்ரா, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் கனிராஜா உள்ளிட்ட 5 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர். 

எரிக்கப்பட்ட பேருந்து

இதனிடையே, ராக்கெட் ராஜா கைதுசெய்யப்பட்டதைக் கண்டித்து, அவரது ஆதரவாளர் ஒருவர் வாட்ஸ் ஆப் மூலம் ஆபாசமாக அச்சுறுத்தும் வகையிலும் பேசி, ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. ’’இதுவரை எத்தனை போலீஸை போட்டுருக்கோம் தெரியுமா உனக்கு? நாங்க நினச்சா எந்தப் போலீஸையும் போடுவோம். நாங்க நினைச்சா சி.எம்-ஐ கூட போட்டுருவோம்.

போன வருஷம், போலீஸ் ஜீப்புல ஏத்திக்கிட்டுப் போன சிங்காரத்தை வெட்டினோம். இப்ப, எஸ்.பி., அருண் சக்திக்குமார் இருக்கிற தெம்புல சில பேர் ஆடுறாங்க. அவரையே போட்டுட்டா, நாங்க யாரை வேணும்னாலும் போடுவோம். எங்களை சட்டத்தால யாரும் எதுவும் செய்ய முடியாது’’ என்று பேசிய ஆடியோ, வைரலாகப் பரவிவருகிறது. முதல்வர், எஸ்.பி ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோவால் மாவட்டம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.  
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!