`ஜனநாயகத்தின் நம்பிக்கை காப்பற்றப்பட்டிருக்கிறது' - பாஜகவை விளாசும் சந்திரபாபு நாயுடு!

டியூரப்பா ராஜினாமா செய்துள்ளதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது என ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். 

நாடே மிகவும் பரபரப்பாக எதிர் நோக்கிக் கொண்டிருந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பல்வேறு திருப்பங்களை சந்தித்திருக்கின்றது. கடந்த 2 நாட்களுக்கு முன்னதாகத்தான் எடியூரப்பா கர்நாடக முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அதற்குள்ளாக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று நடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொள்ளத் தயாரானார் எடியூரப்பா. ஆனால், நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே யாரும் எதிர்பாராத விதம் தனது பதவியை அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். எடியூரப்பா ராஜினாமா செய்துகொண்டது தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் ஜனநாயகம் வெற்றி பெற்றிருப்பதாக கருத்து தெரிவித்தனர். 

இதுகுறித்து ஆந்திர மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று மாலை நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, “இது ஒரு சாதாரண வெற்றி அல்ல. இந்திய ஜனநாயகத்தின் மீதுள்ள நம்பிக்கை காப்பாற்றப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, ஜனநாயகத்தை விரும்பக்கூடிய அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் உள்ளார்கள். இந்தத் தருணத்தை நாம் பெருமையாக நினைக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். முதல்வர் பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளாக அவர் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கிறார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!