“பாவம் கர்நாடக மக்கள்” - காங்கிரஸுக்கு எதிராகக் கொந்தளிக்கும் தமிழிசை

காங்கிரஸின் சுயநலத்துக்காகத் தான் குமாரசாமியை முதல்வராக்கினார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸின் சுயநலத்துக்காகத் தான் குமாரசாமியை முதல்வராக்கினார்கள் என தமிழிசை தெரிவித்துள்ளார்.

தமிழிசை

கர்நாடக தேர்தல் முடிவில் ஏற்பட்ட குழப்பத்தை அடுத்து பாஜக சார்பில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. நேற்று நடைபெறவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர், எடியூரப்பா தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து மஜத கட்சியின் குமாரசாமி, காங்கிரஸ் ஆதரவுடன் கர்நாடக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.  

இந்நிலையில் இது பற்றி கருத்து தெரிவித்துள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “ காங்கிரஸ்தான் ஜனநாயகத்தைப் படுகொலை செய்துள்ளது.116 இடங்களில் டெபாசிட் இழந்த கட்சியின் குமாரசாமியை காங்கிரஸின் சுயநலத்திற்காக முதல்வராக்கியதும்.கர்நாடக மக்களால் நிராகரிக்கப்பட்ட காங்கிரஸின் 16 அமைச்சர்கள் தோல்வி. சித்தராமையா ஆட்சி  வேண்டாமென்ற மக்களுக்குப் பினாமி ஆட்சி. பாவம் கர்நாடக மக்கள்.” எனத் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!