வெளியிடப்பட்ட நேரம்: 11:34 (20/05/2018)

கடைசி தொடர்பு:11:34 (20/05/2018)

அமெரிக்கா உடனான வர்த்தக போரை கைவிட்ட சீனா..!

அமெரிக்கா உடனான வர்த்தக போரை கைவிடுவதாகவும், அமெரிக்க பொருள்கள் மீது விதித்திருந்த இறக்குமதி வரியை ரத்து செய்வதாகவும் சீனா அறிவித்துள்ளது. 

சீனா

சீனாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு அதிகமாக வரியை விதித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அமெரிக்க அதிபரின் இந்தச் செயலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 28 சதவிகிதம் வரியை நிர்ணயித்தது சீனா. இதனால் இந்த இரு நாடுகளுக்கும் இடையே அறிவிக்கப்படாத வர்த்தக போர் உருவானது. 

கடந்த சில காலங்களாகவே வர்த்தக அளவில் அமெரிக்காவும் சீனாவும் மறைமுக தாக்குதலில் ஈட்டுப்பட்டிருந்தன. இந்நிலையில் அமெரிக்க உடனான வர்த்தக போரை கைவிடுவதாகச் சீனாவின் துணை பிரதமர் லியூ கி தெரிவித்துள்ளார்.  இரண்டு நாள்களுக்கு முன்னர் சீன பிரதிநிதிகள் அமெரிக்க அதிபர் ட்ரம்பை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து இன்று சீனா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வர்த்த போர் முடிவுக்கு வந்ததால் அமெரிக்காவில் இருந்து கூடுதல் பொருள்களை சீனாவுக்கு இறக்குமதி செய்ய இருப்பதாகவும் கூறியுள்ளனர்.