`பதவியேற்ற 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்!' - குமாரசாமி பளீச்

முதலமைச்சராகப் பதவியேற்ற 24 மணி நேரத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ம.ஜ.த - காங்கிரஸ் கூட்டணியின் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சராகப் பதவியேற்ற 24 மணி நேரத்தில் கர்நாடக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என ம.ஜ.த தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

குமாரசாமி

Photo Courtesy: ANI

கர்நாடக முதலமைச்சராகப் பதவியேற்றிருந்த எடியூரப்பா, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னதாக பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதையடுத்து, பெரும்பான்மை எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகக் கூறி ம.ஜ.த - காங்கிரஸ் ஆகிய கட்சிகள் சார்பில் ஆளுநர் வாஜூபாய் வாலாவைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினர். இதையடுத்து அந்த கூட்டணியை ஆட்சியமைக்குமாறு ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதையடுத்து ம.ஜ.தவின் குமாரசாமி, வரும் 23-ம் தேதி கர்நாடக முதலமைச்சராகப்  பதவியேற்க இருக்கிறார். பதவியேற்று 15 நாள்களில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். 

இந்தநிலையில், பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, ``நாளை டெல்லி சென்று, சோனியா மற்றும் ராகுல் காந்தியை நேரில் சந்திக்க இருக்கிறேன். முதலமைச்சராகப் பதவியேற்ற அடுத்த 24 மணி நேரத்தில் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம்’’ என்றார். அமைச்சரவை இலாகாக்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பெங்களூருவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கின்றனர். இந்த கூட்டத்தில் இரண்டு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய தலைவர்களும் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!