சத்தீஸ்கரில் நக்சல் தாக்குதல் - பாதுகாப்புப் படை வீரர்கள் 6 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 வீரர்கள் கொல்லப்பட்டனர். 

நக்சல் தாக்குதல்

சத்தீஸ்கரின் தாண்டேவாடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் 7 பேருடன் சென்ற வாகனத்தை நக்சல்கள் வெடிக்கச் செய்தனர். தரையில் பதித்து வைக்கப்பட்டிருந்த வெடியில் சிக்கிய அந்த வாகனம் இரு கூறாக சிதறியது. அதிலிருந்து வீரர்கள் சுமார் 500 மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். இந்த தாக்குதலில் வீரர்கள் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ஒரு வீரர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலத்த காயங்களுடம் மற்றொரு வீரர் ராய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் ராமன்சிங், இது கோழைத்தனமான தாக்குதல். இந்த தாக்குதலுக்கு நமது படைகள் உரிய பதிலடி கொடுக்கும். வளர்ச்சிக்கு எதிராக நக்சல்கள் செயல்பட்டு வருகிறார்கள் என்று தெரிவித்தார். இதுகுறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``வீரர்கள் 6 பேர் உயிரிழந்தது சோகமான சம்பவம். பாதுகாப்புப் படை வீரர்களுடன் நேருக்கு நேர் மோதுவதை விடுத்து, நக்சல்கள் வெடிகுண்டுகளைப் பதுக்கி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். இது கோழைத்தனமானது’’என்றார். 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!