சிறப்பான பருவமழையால் கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் உயர்வு..!

றப்பான பருவ மழை மற்றும் அரசு  அடிப்படை கட்டமைப்பு பணிகளில் அதிகளவில் மேற்கொண்டு வருவது ஆகியவற்றினால் கிராமப்புற மக்களின் செலவிடும் வருவாய் உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில்   இல்லாத அளவிற்கு கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் உயர்ந்துள்ளது.

சிறப்பான பருவமழையால் கிராமப்புற மக்களின் வாங்கும் திறன் உயர்வு..!

சிறப்பான பருவமழை மற்றும் அரசு  அடிப்படைக் கட்டமைப்புப் பணிகளை அதிக அளவில் மேற்கொண்டுவருவது ஆகியவற்றால், கிராமப்புற மக்களின் செலவிடும் வருவாய் உயர்ந்துள்ளது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப்புற மக்களின் வாங்கும்திறன் உயர்ந்துள்ளது.

மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில், கிராமப்புற மக்களின் வாங்கும்திறன் 9.7 சதவிகிதம் வளர்ச்சிகண்டுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 8.6 சதவிகிதமாக இருந்தது. 2014, 2015-ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான வறட்சி காரணமாக கிராமங்களில் வாங்கும்திறன் கடுமையாகச் சரிவடைந்தது. மேலும், 2016-ம் ஆண்டு நவம்பரில் கொண்டுவரப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி அறிமுகம் செய்யப்பட்டது ஆகியவற்றினால், கிராமப்புற மக்களின் வாங்கும்திறன்  கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால், நுகர்பொருள்கள் துறை நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில், கிராமப்புறங்களில் பொதுமக்களின் செலவிடல்மூலம் வருவாய் அதிகரித்தைத் தொடர்ந்து, நுகர்பொருள்கள்  தயாரிப்பு  நிறுவனங்களின் வளர்ச்சி, கடந்த நிதியாண்டின் மத்தியில் சற்று மேம்பட்டது.

கடந்த நிதியாண்டில், நுகர்பொருள் நிறுவனங்கள் 13.5 சதவிகித வளர்ச்சி கண்டுள்ளது. இதற்கு, பொருள்களின் விற்பனை 9.1 சதவிகிதம் அதிகரித்ததே காரணமாகும். இது, இதற்கு முந்தைய இரண்டு நிதியாண்டுகளைவிட 2.5-3 சதவிகிதம் அதிகமாகும். ரூ.3.4 டிரில்லியன் சந்தை மதிப்புகொண்ட இந்திய நுகர் பொருள்கள் துறையில், கிராமங்களின் வாயிலான விற்பனை வருவாய் 40-45 சதவிகிதமாக உள்ளது. இந்த நிறுவனங்களுக்கு கிராமப்புறங்கள் வாயிலாகக் கிடைக்கும் வருவாய், வரும் ஆண்டுகளில் 15-16 சதவிகிதம் வரை வளர்ச்சியடைய வாய்ப்புள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் இந்த வளர்ச்சி 10 சதவிகிதமாகத்தான் இருந்தது. 2016, 2017-ம் நிதியாண்டுகளில் முறையே 5 சதவிகிதமாகத்தான் இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!