பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு! மத்திய அமைச்சர் நம்பிக்கை | Petrol, diesel price will decrease, say Dharmendra prasad

வெளியிடப்பட்ட நேரம்: 05:50 (21/05/2018)

கடைசி தொடர்பு:07:32 (21/05/2018)

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு! மத்திய அமைச்சர் நம்பிக்கை

பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மமேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு விரைவில் தீர்வு எட்டப்படும்' என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தை நிலவரத்துக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றியமைத்துக்கொள்ள கடந்த ஆண்டு ஜூன் மாதம் மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் இந்திய எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த நான்கு வாரங்களாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துவருகிறது. இதனால், உள்நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் அதிகரித்துவருகிறது. தற்போது, சர்வதேச சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின்  விலை 80 டாலரை எட்டியுள்ளது. இதனால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை மேலும் உயரக்கூடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து, விலையைக் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுகுறித்து  மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், 'கச்சா எண்ணெய்  ஏற்றுமதிசெய்யும் நாடுகள் ( OPEC), அதன் உற்பத்தியைக் குறைத்துக்கொண்டுள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.76.24 ஆகவும்,  டீசல் விலை ரூ.67.57 ஆகவும் உயர்ந்  துள்ளது. இந்த விலை உயர்வால் நடுத்தர மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெட்ரோல் மற்றும் டீசல் விலை  உயர்வுக்குத் தீர்வு காண அரசு தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டுவருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு நாட்டின் பொருளாதாரம் மற்றும் பொதுமக்களிடையே எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வுகுறித்து, மத்திய அரசின் ஆதங்கத்தை சவுதி அரேபிய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கச்சா எண்ணெய் விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார்.