ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி! புதினுடன் இன்று சந்திப்பு | Modi leaves to Russia

வெளியிடப்பட்ட நேரம்: 07:38 (21/05/2018)

கடைசி தொடர்பு:09:59 (21/05/2018)

ரஷ்யா புறப்பட்டார் பிரதமர் மோடி! புதினுடன் இன்று சந்திப்பு

அரசு முறைப் பயணமாக, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா புறப்பட்டார்.

மோடி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் பிரதமர் மோடி இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அதற்காக மோடி, விமானம்மூலம் ரஷ்யா புறப்பட்டார்.  இந்த சந்திப்பின்போது இருதரப்பு பிரச்னைகள், பிராந்திய மற்றும் சர்வதேசப் பிரச்னைகள்குறித்து இருவரும் ஆலோசனை நடத்துகிறார்கள். ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியதால், இந்தியா மற்றும் ரஷ்யாவுக்கு ஏற்படும் பொருளாதார பாதிப்புகள், ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியா நிலவரம், பயங்கரவாத அச்சுறுத்தல், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாடு, பிரிக்ஸ் மாநாடு விவகாரங்கள் ஆகியவை பற்றியும் அவர்கள் விவாதிக்க உள்ளனர்.

இந்தச் சந்திப்புகுறித்து மோடி தன் ட்விட்டர் பதிவில், 'நட்புரீதியான ரஷ்ய மக்களுக்கு வணக்கம். ரஷ்யாவின் சோச்சி நகருக்கு செல்வதற்கும், ரஷ்ய அதிபர் புதினை சந்திப்பதற்கும் ஆவலாக இருக்கிறேன். அவரை சந்திப்பது எப்போதும் எனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான்' என்று பதிவிட்டுள்ளார்.