ராஜீவ் காந்தி நினைவு தினம் - வீர் பூமியில் சோனியா மற்றும் ராகுல் அஞ்சலி

இன்று, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 27-வது நினைவு தினம். டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர். 

காந்தி

இந்தியாவின் புகழ்பெற்ற அரசியல் குடும்பத்தில் பிறந்தும் அரசியல்மீது ஆர்வமில்லாது, விமானம் ஓட்டும் தொழிலில் ஈடுபட்டிருந்தார் ராஜீவ் காந்தி. இவரின் தம்பியான சஞ்சய் காந்தி இறந்த பின், மிகுந்த தயக்கத்துடன் வற்புறுத்தலுக்கு இணங்கி அரசியலுக்கு வந்தார். 1981 பிப்ரவரியில், சஞ்சய் காந்தியின் தொகுதியான உத்தரப்பிரதேசத்திலுள்ள அமேதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்திய அமைதி காக்கும் படையை இலங்கைக்கு அனுப்பி, தமிழர்களுக்கு கூட்டாச்சி முறையிலான உரிமையைப் பெற்றுத் தர முயன்றார். 1991-ம் ஆண்டு மே 21-ம் தேதி, ஸ்ரீபெரும்புதூரில் தற்கொலைப் படையினரால் வெடிகுண்டுமூலம் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு இன்றுடன் 27 ஆண்டுகள் ஆகிறது. டெல்லி வீர் பூமியில் உள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில், அவரின் மனைவி சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவரும் ராஜீவ் காந்தியின் மகனுமான ராகுல் காந்தி மற்றும் மகள் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதைசெலுத்தினர். மேலும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் காங்கிரஸின் மூத்த நிர்வாகிகள்  பலரும் மலர் தூவி அஞ்சலிசெலுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!