அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனார் வீட்டில் பணிப்பெண் கொலை! கோவையில் அதிர்ச்சி

கோவையில், அமைச்சர் விஜயபாஸ்கர் மாமனாரின் வீட்டில் பணிபுரிந்து வந்த பெண்ணை, அதே வீட்டில் பணிபுரிந்துவந்த டிரைவர் கொலை செய்துள்ளார்.

கோவையில், அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் வீட்டில் பணிபுரிந்து வந்த பெண்ணை, அதே வீட்டில் பணிபுரிந்துவந்த டிரைவர் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கொலை

கோவையில் சிங்காநல்லூர் அருகே சாக்கடையில், சாக்குமூட்டையில் கட்டப்பட்ட நிலையில், ஒரு சடலம் இருப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சாக்கு மூட்டையில் இருந்த பெண் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், விசாரணையில் அந்தப் பெண், ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனார் சுந்தரம் வீட்டில் பணிபுரிந்தவர் என்றும் தெரியவந்தது.

குறிப்பாக, கடந்த 18-ம் தேதியிலிருந்தே ஜெயந்தி மாயமானது தெரியவந்தது. விஜயபாஸ்கரின் மாமனார் வெளிநாடு சென்றுள்ள நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு, அந்த வீட்டின் டிரைவராக உள்ள மணிவேல் என்பவர், ஜெயந்தியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, ஜெயந்தி தப்ப முயற்சி செய்ததால், அவரின் கழுத்தை நைலான் கயிற்றால் நெரித்து மணிவேல் கொலை செய்துள்ளார். இதைத்தொடர்ந்து, ஜெயந்தியின் சடலத்தை, மூட்டைக் கட்டி வீசியுள்ளார். கொலை செய்த மணிவேலை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!