ரூ.9.44 லட்சத்துக்கு வந்துவிட்டது க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட் | Hyundai Creta Facelift launched in India

வெளியிடப்பட்ட நேரம்: 18:20 (21/05/2018)

கடைசி தொடர்பு:18:27 (21/05/2018)

ரூ.9.44 லட்சத்துக்கு வந்துவிட்டது க்ரெட்டா ஃபேஸ்லிஃப்ட்

ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆரம்ப விலையாக ரூ.9.44 லட்சத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
5 வேரியன்டில், மூன்று இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது க்ரெட்டா.

க்ரெட்டா

காரின் வெளிப்புற மாற்றங்களாகப் பெரிய அறுங்கோண வடிவ க்ரில்லும் அதைச் சுற்றி க்ரோம் நிறமும் பூசப்பட்டுள்ளது, எல்ஈடி DRL உடன் பனி விளக்குகள், முன் பக்கம் புதிய பம்பர் டிசைன், சிறிய மாற்றங்களோடு வரும் ரியர் பம்பர் எனக் காரின் தோற்றம் சில இடங்களில் மாறியுள்ளது. புதிதாக 2 டூயல் டோன் நிறங்களும் வருகிறது. டிரைவர் சீட் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய வசதி, முன்பக்க ஆர்ம்ரெஸ்ட்,
2 ஏர்பேக் மற்றும் ஏபிஎஸ் அனைத்து வேரியன்டிலுமே வந்துவிடுகின்றன. 17 இன்ச் அலாய் வீல், ப்ரொஜக்டர் ஹெட்லைட், க்ரூஸ் கன்ட்ரோல், IPS டிஸ்ப்லேவுடன்கூடிய AVN இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் எனச் சில வசதிகளும் கூடுதலாக வருகின்றன. விலை உயர்ந்த வேரியன்டில் பவர் டிரைவர் சீட், திறக்கக்கூடிய சன்ரூஃப், smart key band, wireless charging support மற்றும் ஆறு காற்றுப்பைகள் வருகின்றன. 

ஃபேஸ்லிஃப்ட் க்ரெட்டா

இன்ஜினில் எந்த மாற்றமும் இல்லை. அதே 1.4 மற்றும்1.6 லிட்டர் பெட்ரோல், டீசல் இன்ஜின்கள்தான் உள்ளன. மேனுவல் மற்றும் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் உள்ளது. விலை உயர்ந்த SX (O) வேரியன்டில் ஆட்டோமெடிக் கியர்பாக்ஸ் கிடையாது. 9.43 லட்சத்தில் ஆரம்பித்து 15.04 லட்சம் வரை கிடைக்கிறது இந்த கார். ஃபேஸ்லிஃப்ட் காரின் பேஸ் வேரியன்ட்டின் விலை முந்தைய காரை விட ரூ.15,000 கூடுதலாகவும் டாப் வேரியன்ட் ரூ.44,000 கூடுதலாகவும் உள்ளது. 

வேரியன்ட் இன்ஜின்

எக்ஸ்-ஷோரூம்

விலை

E

1.6 பெட்ரோல் ரூ. 9,43,908
E+ 1.6 பெட்ரோல் ரூ.9,99,000
SX Dual tone 1.6 பெட்ரோல் ரூ.12,43,934
SX (AT) 1.6 பெட்ரோல் ரூ.13,43,834
SX(O) 1.6 பெட்ரோல் ரூ.13,59,948
E+

1.4 டீசல்

ரூ.9,99,900
S 1.4 டீசல் ரூ.11,73,893
S AT 1.6 டீசல் ரூ.13,19,934
SX 1.6 டீசல் ரூ.13,23,934
SX Dual tone 1.6 டீசல் ரூ.13,73,934
SX AT

1.6 டீசல்

ரூ.14,83,934
SX(O) 1.6 டீசல் ரூ.15,03,934