வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (21/05/2018)

கடைசி தொடர்பு:19:20 (21/05/2018)

நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய வாலிபருக்கு நடந்த கொடூரம்!

ராமேஸ்வரம் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் அந்த வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் சுனாமி குடியிருப்பில் வசித்து வந்த வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், கொலையாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் அந்த வாலிபரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ராமேஸ்வரம் சுனாமி குடியிருப்ப்பில் இறந்து போன வாலிபர்
 

ராமேஸ்வரம் தனுஷ்கோடி சாலையில் உள்ளது சுனாமி குடியிருப்பு. உச்சிப்புளி கீழநாகாச்சி பகுதியைச் சேர்ந்த வாலிபர் பாலமுருகன் இங்குள்ள தனது அக்காவின் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு தனது நண்பர்களுடன் சினிமாவுக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய பாலமுருகன் தனது அக்கா வீட்டின் மாடியில் சென்று உறங்கியுள்ளார். இந்நிலையில் இன்று காலை பாலமுருகனின் சகோதரி வீட்டுக் கதவைத் திறந்த போது அந்த வீட்டு வாசலில் பால முருகன் இறந்து கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

 

ராமேஸ்வரம் சாலையில் மறியல்

இதையடுத்து பாலமுருகனின் உடலைக் கைப்பற்றிய போலீஸார் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக எடுத்து வந்தனர். அங்கு உடற்கூறு ஆய்வு முடிந்த நிலையில் பாலமுருகனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்துவிட்டதுடன், கொலையாளிகளைக் கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மருத்துவமனை சாலையில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் பாலமுருகனின் உடலை வாங்கிச் சென்றனர். 
நேற்று இரவு ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவையில் 2 வாலிபர்கள் கழுத்து அறுத்துக் கொல்லபட்ட நிலையில் ராமேஸ்வரத்தில் இன்று நடந்த வாலிபர் பாலமுருகனின் இறப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.