காங்கிரஸ் கர்நாடகவில் பினாமி ஆட்சி நடத்த பார்க்கிறது..! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தாக்கு

குமாரசாமியை வைத்து காங்கிரஸ் கட்சியினர் கர்நாடகவில் பினாமி ஆட்சி நடத்தப் பார்க்கிறார்கள் என்றும் காங்கிரசை விமர்சித்தும், பா.ஜ.க.வை புகழ்ந்தும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்.பி.உதயகுமார்

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், "அதிமுகவில் இரட்டை இலையும் கட்சிக் கொடியும் எங்கே இருக்கிறதோ அங்கேதான் உண்மையான தொண்டன் இருப்பான். இந்த உதயகுமாரும் இருப்பான். பதவிக்காக உண்மையான தொண்டன் கவலைப்பட மாட்டான். இதுதான் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து தொடர்ந்து வருகிறது. சினிமாவில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் பவுடர் போட்டுக்கொண்டு சிலர் மேடையில் நடிக்க வருகிறார்கள்.

சித்தராமையா சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு தர மாட்டேனென்று சொன்னார். அவரை கர்நாடக மக்கள் வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஆனால், பா.ஜ.க.வோ காவிரியை பற்றி தேர்தல் அறிக்கையில் ஒன்றும் குறிப்பிடவில்லை. அதனால்தான் நடுநிலையான அவர்களை முதன்மை கட்சியாக மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். சித்தராமையா வீட்டுக்கு சென்றுவிட்டாலும், காங்கிரஸ் கட்சி குமாரசாமியை வைத்து பின் வழியாக பினாமி ஆட்சு நடத்தப்பார்க்கிறார்கள்" என்று பா.ஜ.க.வுக்கு ஆதரவாகப் பேசியதை கட்சியினர் ஆச்சரியமாக பார்த்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!