“குடிமைப் பணிகள் தேர்வு முறை மாற்றங்களை எதிர்க்க வேண்டும்!” - வைகோ | Citizens should oppose IAS exam procedure changing, says Vaiko

வெளியிடப்பட்ட நேரம்: 04:30 (22/05/2018)

கடைசி தொடர்பு:04:30 (22/05/2018)

“குடிமைப் பணிகள் தேர்வு முறை மாற்றங்களை எதிர்க்க வேண்டும்!” - வைகோ

குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களை எதிர்க்க வேண்டும் என வைகோ அறிக்கை வெளியிட்டது தொடர்பான கட்டுரை...

வைகோ

“தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மத்திய அரசு, குடிமைப் பணிகள் தேர்வுப் பணி ஒதுக்கீடு முறையில் மாற்றம் கொண்டுவர முனைந்துள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வில் வெற்றி பெற்றதும் முசோரியில் உள்ள லால்பகதூர் சாஸ்திரி தேசிய மேலாண்மை பயிற்சி நிறுவனத்தில் 100 நாள்கள் பயிற்சியின்போது வழங்கப்படும் மதிப்பெண் அடிப்படையில்தான் இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, வெளியுறவுப் பணி உள்ளிட்ட பல்வேறு குடிமைப் பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும். 

யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்குத் தரவரிசை அடிப்படையில் இனி பணிகள் ஒதுக்கப்பட மாட்டாது. இது, ஒரு வகையான தரப்படுத்துதல் முயற்சியாகும். தாய்மொழியில் யு.பி.எஸ்.சி. தேர்வு எழுதி, அதில் வெற்றிபெற்று வரும் சாதாரண கிராமப்புறப் பின்னணியைக் கொண்ட பின்தங்கிய, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த இளைஞர்களை இந்தியக் குடிமைப் பணிகளில் நுழையவிடாமல் தடுக்கும் சதித் திட்டமாகும். 

சமூக நீதிக்கு எதிரான மோடி அரசின் இதுபோன்ற செயல்பாடுகளை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. மோடி அரசின் இதுபோன்ற மோசமான நடவடிக்கைகள் இந்தியாவின் கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு வேட்டு வைத்துவிடும் என்பதை உணர்ந்துகொண்டு தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களும் குடிமைப் பணிகள் தேர்வு முறையில் உத்தேசிக்கப்பட்டுள்ள மாற்றங்களைக் கடுமையாக எதிர்க்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close