பெட்ரோல், டீசல் விலை உயர்வு; ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு | Rise in petrol and diesel prices RBI may rise Repo rate in the August month

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/05/2018)

கடைசி தொடர்பு:10:07 (22/05/2018)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு; ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துவருவதால், வரும் ஆகஸ்ட் மாதம் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்துவருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 80 டாலரை எட்டியுள்ளது. இதன் காரணமாக, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து  எண்ணெய் நிறுவனங்கள் தினமும் அதிகரித்து வருகின்றன. இதனால், பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்ந்து பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. காய்கறி, பழங்கள், அத்தியாவசியப் பொருள்களி்ன் விலை தொடர்நது உயர வாய்ப்புள்ளது. இதனால், நாட்டில் பண வீக்க விகிதம் அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ரிசர்வ் வங்கி பண வீக்க விகிதத்தைக் கட்டுப்படுத்த, வட்டி விகிதத்தை (  ரெப்போ ரேட் உயர்த்த வாய்ப்புள்ளதாக வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

வட்டி
ரிசர்வ் வங்கி, 3 மாதங்களுக்கு ஒரு முறை  நிதிக்கொள்கையை வெளியிட்டுவருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் நிதிக்கொள்கை தொடர்பான அறிக்கையை வெளியிடும். அப்போது, பண வீக்கத்தைக் கருத்தில்கொண்டு வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வெளிநாட்டுத் தரகு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. வரும் ஜூன் மாதம் அதன் நிதிக்கொள்கையில் எந்த மாற்றத்தையும்  அறிவிக்க வாய்ப்பில்லை. இதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மற்றும் அக்டோபர் மாதங்களில் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் ( ரெப்போ ரேட்) உயர்வு இருக்கும் என்று அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.