வெளியிடப்பட்ட நேரம்: 09:30 (22/05/2018)

கடைசி தொடர்பு:09:30 (22/05/2018)

அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரைக் கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

சிவகங்கை அ.தி.மு.க ஒன்றியச் செயலாளரைக் கைதுசெய்யச் சொல்லி, ஊரக வளர்ச்சித் துறையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனால், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

Rural development sivagangai

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 12 ஒன்றியங்கள், 445 ஊராட்சிகளில் மொத்தம் 1096 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். சிங்கம்புணரி தாலுக்கா எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஊராட்சி நிதி மூலம் 100 நாள் வேலையாட்களைக் கொண்டு தடுப்பணை கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதை டெண்டர் விடக் கோரி, ஆளும் கட்சிப் பிரமுகரும் ஒன்றியச் செயலாளருமான ராஜமாணிக்கம், ஊரக வளர்ச்சி அலுவலகத்துக்குள் புகுந்து அரசு ஊழியர்களைத் தாக்க முயன்றுள்ளார். இதில் ஏற்பட்ட பிரச்சனையில், ஊரகவளர்ச்சித் துறை  உதவிப்பொறியாளர் ஜோசப் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்த முயன்றதாகப் புகார் அளிக்கப்பட்டது.  ராஜமாணிக்கம் ஆதரவாளரான குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருள், சாலை ஆய்வாளர், சையது பாண்டி ஆகிய நான்கு பேர் மீதும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் கொடுத்ததன் அடிப்படையில், நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவுசெய்தனர். 

ஆனால் காவல்துறை, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சாதிப் பெயரைச் சொல்லி திட்டியதாக, குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் பொய்யான புகார்களைப் பெற்றுள்ளது. இதைக் கண்டித்து, தற்செயல் விடுப்பு போராட்டம் நடைபெற்றதால், ஊரக வளர்ச்சித் துறை அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. நேற்று மாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க