ராணுவ வீரரான தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்திய மகள்! கண் கலங்கவைத்த புகைப்படம்

காஷ்மீரில், தீவிரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த ராணுவ வீரரின் உடலுக்கு, அவரின் மகள் அஞ்சலிசெலுத்தும்  காட்சிகள், பார்ப்போர் மனதைக் கலங்கவைக்கிறது.

காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், கடந்த ஏப்ரல் 10-ம் தேதியன்று  தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், தீபக் நெய்ன்வால் என்ற வீரர் படுகாயம் அடைந்தார். உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்த நிலையில் புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தீபக், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

  ராணுவ வீரரின் உடல், குடும்பத்தினர் அஞ்சலிசெலுத்துவதற்காக சொந்த ஊரான உத்தரகாண்ட்டில் உள்ள டேராடூனில் வைக்கப்பட்டிருந்தது. அப்போது, ராணுவ வீரருக்கு அவரின் 8 வயது மகள் அஞ்சலிசெலுத்திய காட்சிகள், பார்ப்போர் மனதைக் கலங்கவைக்கும் விதமாக இருந்தது. அந்தக் குழந்தை, மிகவும் ஏக்கத்துடன் அழுதுகொண்டே தந்தைக்கு அஞ்சலிசெலுத்திய காட்சிகள் சமூக வலைதளங்கள் முழுவதையும் ஆக்கிரமித்துள்ளன. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!