நிபா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கையால் பொதுமக்கள் அச்சம்! | Because of nipah virus 2 more people were died

வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (22/05/2018)

கடைசி தொடர்பு:14:30 (22/05/2018)

நிபா வைரஸ்: உயரும் பலி எண்ணிக்கையால் பொதுமக்கள் அச்சம்!

கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவந்த மேலும் இருவர் பலியானதால் நிபா வைரஸ் பீதி அதிகரித்துள்ளது.

கோழிக்கோடு  மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்தவர்களில், மேலும் இருவர் பலியானதால் நிபா வைரஸ் பீதி அதிகரித்துள்ளது.

நிபா வைரஸ்

கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புறம் மாவட்டங்களில், வெளவால்கள்மூலம் பரவும் நிபா வைரஸ் காய்ச்சலால் நேற்றுவரை 10 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கோழிக்கோடு மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் சிகிச்சைபெற்றுவந்த குராச்சுண்டு பகுதியைச் சேர்ந்த ராஜன், நாதாபுரம் செக்யாடு பகுதியைச் சேர்ந்த அசோகன் ஆகியோர் இன்று காலை இறந்தனர். இவர்களுடைய ரத்த மாதிரிகள் புனேவுக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டிருந்த நிலையில், இருவரும் உயிரிழந்தனர். இதனால், கேரளாவில் நிபா வைரஸ் பீதி அதிகரித்துள்ளது.  கோழிக்கோடு மாவட்டம் பேராம்பிறையில், மத்திய கால்நடை பாதுகாப்புத்துறை கமிஷனர் அனுப்பிய குழுவினர் இன்று வந்தனர். அவர்களின் அறிவுறுத்தல்படி அனைத்து காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பாதித்துள்ள கால்நடைகளைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெளவால் கடித்ததாக சந்தேகிக்கப்படும் பழங்களை மனிதர்கள் சாப்பிடாமல் இருப்பதுடன், கால்நடைகளும் சாப்பிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.