`ரூ.10 லட்சம் நிதி; அரசு வேலை' - துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு | Government announced relief fund for sterlite firing death

வெளியிடப்பட்ட நேரம்: 18:55 (22/05/2018)

கடைசி தொடர்பு:18:55 (22/05/2018)

`ரூ.10 லட்சம் நிதி; அரசு வேலை' - துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு அரசு நிவாரணம் அறிவிப்பு

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. 

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி, ஸ்டெர்லைட் எதிர்ப்பு இயக்கம் மற்றும் கிராம மக்கள் இணைந்து ஆட்சியர் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, நடந்த கலவரத்தை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், பொதுமக்கள் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் தமிழகத்தை உலுக்கியிருக்கும் நிலையில் தமிழக அரசுக்கு எதிராகக் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஆனால், தவிர்க்க முடியாத சூழ்நிலையில், துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டது. 

இதற்கிடையே, துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும் லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணம் வழங்கப்படுகிறது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்குத் தகுதிக்கு ஏற்றவாறு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்; சம்பவம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close