தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு ஆளுநர் இரங்கல்!

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். 

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான இன்றைய போராட்டத்தின் போது ஏற்பட்ட கலவரத்தை அடக்க நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 10க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் தமிழகத்தைப் பரபரக்க வைத்துள்ளது. மேலும் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி நிவாரணம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்திருக்கும் நிலையில் அரசு சார்பில் ரூ.10 லட்சம் நிதி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே,  துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் குடும்பங்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அறிந்து எனது மனம் துக்கத்தால் நிறைந்துள்ளது. உயிரிழந்தவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் அனைவரும் மாநிலத்தில் அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும்" எனக் கூறியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!