`எங்கள் போராட்டத்தை அரசு தாங்காது' - ஸ்டெர்லைட் விஷயத்தில் பாரதிராஜா காட்டம்!

பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வரும் இயக்கங்கள், போராட்டம் நடத்தும் இயக்கங்கள் ஒன்றிணைந்து மாபெரும் நடத்த திட்டம்- பாரதிராஜா

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கக்கோரியும்,  நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் தூத்துக்குடியில் மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்டெர்லைட் ஆலையால் நிலத்தடி நீர், காற்று மாசுபடுதலால் பல நோய்களும் தாக்குகின்றன என மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகினறனர்.      

பாரதிராஜா

ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்து விளக்கும் பாடல் ஒன்றை இயக்குநர் அமீர் நடிப்பில் தயாராகியிருந்தது.  `ஸ்டெர்லைட் ஆலையை மூடு' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில் வேல்முருகன், அமீர், பாரதிராஜா, டிராஃபிக் ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். இதில் பேசிய இயக்குநர் பாரதிராஜா  ``ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து போராட்டம் நடத்துவது மக்கள் தானே. அரசியல் போராட்டமா நடந்தது. ஸ்டெர்லைட் போராட்டத்தைப் பலமாதங்களாக பல்வேறு இயக்கங்கள் இணைந்து முன்னெடுத்து நடத்தி வருகின்றனர். இயக்கங்கள் பெயர் எடுப்பதற்காக இந்த விஷயங்கள் நடத்தப்படுவதில்லை. அந்த பகுதிமக்களின் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என மக்கள் போராடுகிறார்கள். பிரிட்டிஷ்  ஆட்சிக்காலத்தில்கூட போராட்டங்கள் நடந்தன. ஆனால் இவ்வளவு அடக்குமுறைகள் இல்லை. இது மட்டுமில்லை பல்வேறு விதமான பிரச்னைகள் இருக்கு. இவ்வளவு இயக்கங்கள் அங்குப் போராடி வரும்போது தடை விதித்திருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பங்கு பெற்றவகள் சமுதாய நோக்கோடு சமுதாய நலன் கருதி நாங்கள் இங்குக் கூடியிருக்கிறோம்.

ஸ்டெர்லைட்

எமர்ஜென்சி காலத்தில்கூட நாம் சுதந்திரமாக இருந்தோம் .அதில் சிறு நியாயம் இருந்தது. இயக்கங்களைத் தடை செய்வது குண்டர் சட்டம் பாய்வது என தற்போது , அதைக்காட்டிலும் கொடூரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் இவ்வளவு பிரச்னைகள்  இருக்கு, இது ஒரு ஜனநாயகமானதாக இல்லை என எங்கள் கோரிக்கைகளை தலைமை செயலாளர், முதல்வர், அமைச்சர் என அனைவரையும் பார்த்துக் கூறவுள்ளோம். எங்கக் கோரிக்கைகளுக்குச் சரியான வகையில் பதில்கள் இல்லையென்றால் வித்தியாசமான முறையில் அனைத்துத் தமிழ் சமுகமும் இணைந்து போராடும்போது தமிழக அரசால் தாங்க முடியாது" எனக் காட்டமாக பேசினார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!