மீன்பிடி மிதவைகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சிறுதொழில் மீனவர்கள்!

 ராமேஸ்வரத்தில் கட்டுமர மீனவர்கள் பயன்படுத்தி வரும் கடற்கரை பகுதியில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி மிதவைகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 ராமேஸ்வரத்தில் கட்டுமர மீனவர்கள், தாங்கள் பயன்படுத்தி வரும் கடற்கரை பகுதியில் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி மிதவைகளுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

மீனவர்கள் முற்றுகை

 ராமேஸ்வரம் ஓலைக்குடா சங்குமால் கடற்கரை பகுதியில் சிறு நாட்டுப்படகுகள், கட்டுமரங்கள், தெர்மாகோல் மிதவைகள் ஆகியவற்றின் மூலம் சிறு தொழில் மீனவர்கள், மீன்பிடித்தலில் ஈடுபட்டு வருகின்றனர். பல ஆண்டு காலமாக மீனவர்கள் பயன்படுத்தி வரும் இந்த பகுதியில் பூங்கா அமைக்க மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் திட்டமிட்டுள்ளது.

இந்த பூங்கா அமைந்தால் தங்களது வாழ்வாதாரமாக உள்ள மீன்பிடி தொழிலில் ஈடுபட கடும் நெருக்கடிகள் ஏற்படும் என கருதும் சிறு தொழில் மீனவர்கள் பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன்படி இன்று நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு திரண்ட மீனவர்கள் மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி மிதவைகளுடன் ராமேஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!