டு பிளெஸ்ஸிஸ் அதிரடி..! ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி | Chennai team beats Hyderabad

வெளியிடப்பட்ட நேரம்: 23:14 (22/05/2018)

கடைசி தொடர்பு:23:18 (22/05/2018)

டு பிளெஸ்ஸிஸ் அதிரடி..! ஹைதராபாத்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது சென்னை அணி

ஹைதரபாத்துக்கு எதிரானப் போட்டியில் வெற்றி பெற்று சென்னை அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐ.பி.எல் லீக் போட்டிகளில் அதிக வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களில் இருந்த ஹைதராபாத் மற்றும் சென்னை அணிகள் இன்று குவாலிஃபையர்-1 போட்டியில் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது.

அடுத்து களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க வீரர் ரன் ஏதும் எடுக்காமலே ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா 22 ரன்களிலும், அம்பத்தி ராயுடு ரன் ஏதும் எடுக்காமலும், தோனி 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சென்னை அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தநிலையில்,  மறுபுறம் டு பிளெஸ்ஸிஸ் மட்டும் அதிரடியாக ஆடி 67 ரன்களைக் குவித்தார். இறுதியில் சென்னை 19.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 140 ரன்கள் எடுத்துவெற்றி பெற்றது.