வெளியிடப்பட்ட நேரம்: 10:43 (23/05/2018)

கடைசி தொடர்பு:10:53 (23/05/2018)

பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்!

முன்னாள் மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மரணம்.

பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயது மகன் மாரடைப்பால் மரணம்!

பாரதிய ஜனதா கட்சித் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயாவின் 21 வயதான மகன் வைஷ்ணவ், மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

பண்டாரு தத்தாத்ரேயா மகன் மரணம்

செகந்திராபாத் தொகுதி எம்.பி-யான பண்டாரு தத்தாத்ரேயாவுக்கு, வைஷ்ணவ் என்ற மகனும் விஜயலட்சுமி என்கிற மகளும் உண்டு. ராம்நகரில் உள்ள வீட்டில், நேற்று இரவு அனைவரும் உணவருந்திவிட்டு படுக்கச் சென்றுள்ளனர். திடீரென்று நெஞ்சுவலிப்பதாக வைஷ்ணவ் கூறியுள்ளார். குருநானக் மருத்துவமனையில் அவரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  நள்ளிரவு 12.30 மணியளவில் சிகிச்சை பலன் அளிக்காமல் வைஷ்ணவ் இறந்துபோனார். 

எம்.பி.பி.எஸ் மூன்றாம் ஆண்டு படித்துவரும் வைஷ்ணவ், உடல் எடையைக் குறைப்பதற்காக டயட் கன்ட்ரோலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. திடீர் மாரடைப்புக்கு  டயட் கன்ட்ரோல்கூட  காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சந்தேகிக்கின்றனர். வைஷ்ணவின் உடலில் வேறு எந்தப் பிரச்னையும் இல்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

வைஷ்ணவ், பாரதிய ஜனதா கட்சியில் உறுப்பினராக இருந்தார். கட்சி நடவடிக்கைகளிலும் பங்குகொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். பண்டாரு தத்தாத்ரேயாவின் மகன் இறப்புக்கு, ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க