விரைவில் இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்! | The central government has approved the formation of India's first national sports university in Manipur

வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (24/05/2018)

கடைசி தொடர்பு:07:48 (24/05/2018)

விரைவில் இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டு பல்கலைக்கழகம்!

மணிப்பூர் மாநிலத்தில்  இந்தியாவின் முதல் தேசிய விளையாட்டுப் பல்கலைக்கழகத்தை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், ``ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்துக்கொண்டிருக்கிறோம். மாநில அரசின் ஒப்புதலுடன் மணிப்பூரிலுள்ள இம்பாலில் இடம் பார்க்கப்பட்டு பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு தயாராக உள்ளது. நிலுவையில் உள்ள இந்த மசோதா, ஜனாதிபதி ஒப்புதல் அளித்தால், உடனடியே தாக்கல் செய்யப்பட்டு, விரைவில்  பல்கலைக்கழகம் அமைக்கும் வேலைகள் விரைவில் தொடங்கப்படும்" என்றார்.

2017-ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில், இந்தியாவின் முதல் விளையாட்டு மைதானம் அமைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அந்த மசோதாவில், 'தற்போது விளையாட்டு வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் பல்வேறு பயிற்சி வகுப்புகளை சில பல்கலைக்கழகங்கள் நடத்தி வருகின்றது. ஆனால், அவர்களுக்கும்  தொழில்நுட்ப முறை பயிற்சி, உயர்திறன் பயிற்சி போன்றவை தேவைப்படுகிறது. இவற்றை அமைத்துக் கொடுத்து விளையாட்டு வீரர்களுக்கும் தொழில்நுட்பத்துக்கும் இடையே உள்ள இடைவேளையை விளக்கி அவர்கள் பயன் பெற இது அவர்களுக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.