வெளியிடப்பட்ட நேரம்: 07:53 (24/05/2018)

கடைசி தொடர்பு:08:02 (24/05/2018)

`சரித்திரம் காணாத புரட்சி வெடிக்கும்’ - கொதிக்கும் கமல்ஹாசன்

தூத்துக்குடியில் இணையம் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டத்துக்குக் கண்டனம் தெரிவித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

கமல்

தூத்துக்குடியில் இரண்டு நாள்களாக நடந்து வந்த கலவரம், போராட்டம், துப்பாக்கிச்சூட்டை அடுத்து அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. நேற்று இது குறித்து ஆலோசனை செய்த உள்துறை அமைச்சகம் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் உள்ள இணையச் சேவை முற்றிலும் நிறுத்த உத்தரவிட்டுள்ளது. அங்கு நடைபெறும் கல நிலவரங்களை சிலர் சமூக வலைதளங்களில் பதிவு செய்வது போராட்டக்காரர்களை மேலும் தூண்டும் விதமாக இருக்கும் எனக் கருதி மாவட்டம் முழுவதும் இணையச் சேவையை முடக்கியுள்ளது உள்துறை. இதற்கு போராட்டக்காரர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருது வெளியிட்டுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், ``தூத்துக்குடியில் இணையம் துண்டிப்பா?அடுத்து என்ன தமிழர்களை சாதி விலக்கிவைப்பீர்களா? சரித்திரம் காணாத  புரட்சி  வெடிக்கும்.மக்களின் வலிமையை எதிர் கொள்ளும் பலம் எந்த அரசுக்கும் இல்லை. அதுவும் இந்த அரசுக்கு இல்லவே இல்லை! ”என மிகவும் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.