'உங்கள் சவாலை ஏற்கிறேன் கோலி; விரைவில் பகிர்கிறேன்'- பிரதமர் மோடி அதிரடி

பிரதமர் மோடி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் கோலியின் சாவலை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார்.
 

மோடி


கடந்த மார்ச் மாதம் இந்தியப் பிரதமர் மோடி ஃபிட் இந்தியா இயக்கத்தைத் தொடங்கினார். இந்தியர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் இது செயல்படுத்தப்பட்டது. ஏப்ரல் மாதத்தில் நடந்த மனதின் குரல் நிகழ்ச்சியிலும் இதுகுறித்து அவர் பேசினார். மேலும், அவர் உடற்பயிற்சி செய்வதுபோல் 3டி வீடியோ ஒன்றும் வெளியானது. 

மோடி 3டிஇந்நிலையில், நேற்று முன்தினம், இந்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் ட்விட்டரில், உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து, `சமூக வலைதளங்களில் நீங்கள் உங்கள் உடல்களை எப்படி ஃபிட் ஆக வைத்துள்ளீர்கள் என்பது தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்களை பகிருங்கள். உங்கள் நண்பர்களுக்கும் ஃபிட்னஸ் சேலஞ்சை அனுப்புங்கள்’ என தெரிவித்ததுடன், பாலிவுட் நடிகர் ஹிர்திக் ரோஷன், இந்திய கேப்டன் கோலி மற்றும் சாய்னா நேவால் ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். 

இந்நிலையில், நேற்று இரவு இந்திய கேப்டன் விராட் கோலி இந்த சேலஞ்சை ஏற்று, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், தனது மனைவி அனுஷ்கா ஷர்மா, இந்தியப் பிரதமர் மோடி மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் தோனி ஆகியோருக்கு இந்த சேலஞ்சை செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், பிரதமர் மோடி, கோலியின் சவாலை ஏற்பதாகத் தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர், ‘இந்தச் சாவலை ஏற்கிறேன் விராட். விரைவில் எனது ஃபிட்னஸ் சேலஞ்ச் வீடியோவை பகிர்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார். 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!