குமாரசாமி பதவியேற்பு விழாவில் நடந்த குதூகலம்! | Kumaraswamy swearing-in: Big change coming in 2019

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (24/05/2018)

கடைசி தொடர்பு:12:35 (24/05/2018)

குமாரசாமி பதவியேற்பு விழாவில் நடந்த குதூகலம்!

மோடிக்கு எதிராக வலுவான கூட்டணி அமைய கர்நாடக முதல்வரின் பதவியேற்பு விழா வித்திட்டுள்ளது.

குமாரசாமி பதவியேற்பு விழாவில் நடந்த குதூகலம்!

டுத்த பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. கர்நாடக முதல்வர் குமாரசாமியின் பதவியேற்பு விழா புதிய கூட்டணிக்கு வித்திட்டுள்ளது. குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல்காந்தியுடன் சேர்ந்து மாயாவதியும் விழாவில் பங்கேற்றார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பனார்ஜி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் வருகையால் குமாரசாமியின் பதவியேற்பு விழா மேலும் அமர்க்களப்பட்டது. இவர்கள் தவிர அகிலேஷ் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் குமாரசாமியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்றனர். 

மோடிக்கு எதிராக திரளும் எதிர்க்கட்சி தலைவர்கள்

விதான் சவுதானில் நடந்த விழாவுக்கு முதல் ஆளாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வந்தார். அடுத்ததாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வர, அகிலேஷ் யாதவ் எழுந்து சென்று கைகுலுக்கி நலம் விசாரித்தார். லாலுவின் மகன் தேஜஸ்வனி, சோனியா காந்தியின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.

சோனியா காந்தி மிகுந்த உற்சாகத்துடன் பதவியேற்பு விழாவில் பங்கேற்றார். அடிக்கடி மாயாவதி பக்கம் திரும்பி சோனியா சிரித்துப் பேசியவாறு இருந்தார். மேற்கு வங்கத்தில் மம்தாவும் சீதாராம் யெச்சூரியும் அரசியல் எதிரிகள். இதனால் மேடையின் ஒரு முனையில் மம்தாவுக்கும் மற்றொரு முனையில் சீதாராம் யெச்சூரிக்கும் இருக்கை அமைக்கப்பட்டிருந்தது. எனினும் ஒரு கட்டத்தில் இருவரும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டபோது, புன்முறுவலுடன் ஒருவரை ஒருவர் கடந்தனர். 

மொடிக்கு எதிரான தலைவர்கள்

`இவர்கள் எல்லாம் எனக்கு ஆதரவு தருவதற்காக மட்டும் இங்கே வந்திருப்பதாக நான்  கருதவில்லை. 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான விதை இது'' என்று கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க