வெளியிடப்பட்ட நேரம்: 15:13 (24/05/2018)

கடைசி தொடர்பு:15:18 (24/05/2018)

சவுதி பட்டத்து இளவரசர் அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டாரா?

சவுதி பட்டத்து இளசரசர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி பட்டத்து இளவரசர் அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டாரா?

வுதி பட்டத்து இளவரசர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்

சவுதி மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு, பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயாஃப்பை  நீக்கம் செய்துவிட்டு, தன் மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசர் ஆக்கினார். தந்தைக்கு 80 வயதுக்கு மேலாகிவிட்ட நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரான இளவரசர் சல்மான்தான் முக்கிய முடிவுகளை எடுத்துவந்தார். ஊழல்களில் திளைத்த இளவரசர்கள் உள்ளிட்ட 200 பெரும் பணக்காரர்களைச் சிறையில் (ரிட்ஸ் கார்ட்டன் ஐந்து நட்சத்திர விடுதி) அடைத்தார். ஊழல் செய்த பணத்தை அரசிடம் ஒப்படைத்தவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர். 

சவுதியில், பெண்களுக்கு சாதகமாக சில முக்கிய முடிவுகளை இளவரசர் எடுத்தார். பெண்கள் கால்பந்து மைதானங்களுக்குள் போட்டியை ரசிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆண் துணை இல்லாமல் வெளியே செல்லவும் கார் ஓட்டவும்கூட பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. சவுதியில் சினிமா தியேட்டர்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சவுதியை சற்று மாடர்ன் ஆக்கும் முயற்சியில் இளவரசர் முகமது பின் சல்மான் முயன்றுவந்தார். 

இந்த நிலையில் இளவரசர் முகமது பின் சல்மான், அவரின் அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏப்ரல் 21-ந் தேதிக்குப் பிறகு, இளவரசர் எந்த பொது நிகழ்ச்சியிலும் பங்கேற்கவில்லை. ரியாத் அரண்மனையில் சமீபத்தில் நடந்த துப்பாக்கித் தாக்குதலில் இளவரசர் மீது குண்டு பாய்ந்ததாகவும், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை என்றும், அதனால் இளவரசர் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது கைதுசெய்யப்பட்டிருக்கலாம் என்றும் ஈரான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

சமீபத்தில், அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பியோ சவுதிக்கு வருகை தந்திருந்தார். சவுதி மன்னர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் மட்டுமே அமெரிக்க வெளியுறவுத்துறை செயலரை சந்தித்துப் பேசினர். இளவரசராகப் பதவியேற்ற பின், எந்த பொது நிகழ்ச்சியிலும் இளவரசர் சல்மான் பங்கேற்காமல் இருந்ததில்லை என்றும் ஈரான் ஊடகங்கள் சந்தேகப்படுகின்றன. 

 வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நேற்று சவுதி அரச குடும்பம், இளவரசர் முகமது பின் சல்மான் அரசு அதிகாரிகளுடன் கூட்டம் நடத்துவது போன்ற  புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.  


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க