`எங்க ஊர்ல நடக்கிற கலவரத்த பார்த்ததுல இருந்து ஒண்ணுமே செய்ய முடியல' - இயக்குநர் ஹரி வேதனை

தமிழ் சினிமாவில் முக்கியமான திரைக்கலைஞர்கள் பலர் தூத்துக்குடியைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். முன்னணி ஸ்டன்ட் இயக்குநரான சில்வா, தன் தங்கையின் கணவரை போலீஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இழந்திருக்கிறார். காவல்துறையின் பெருமைகளை மையப்படுத்தி 'சாமி', 'சிங்கம்' போன்ற படங்களை இயக்கிய ஹரியின் சொந்த ஊர் தூத்துக்குடி. ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தொடர்பாக நடந்த போராட்டத்தில் ஏற்பட்ட கலவரம், துப்பாக்கிச்சூடு குறித்து இயக்குநர் ஹரியிடம் கேட்டோம்.

டைரக்டர் ஹரி

''தூத்துக்குடியில சாதி, மதம் கடந்து எல்லோருமே ஒண்ணுமண்ணா பாசத்தோட இருப்போம். நாம வாழ்ற நாட்டுலதான் இதெல்லாம் நடக்குதானு என்னால நம்பமுடியலை. போலீஸ் ரவுடிகளையும் கெட்டவங்களையும்தான் துப்பாக்கியால் சுடுவாங்க. தங்களோட வாழ்க்கைக்கான உரிமைகேட்டுப் போராடுற நல்லவங்களை ஏன் துப்பாக்கியால் சுடுறாங்க. மக்களைப் பாதுகாக்க வேண்டிய போலீஸே இப்போ அப்பாவி மக்களோட உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இதுவரை எந்த நாட்டு வரலாற்றிலும் இல்லாத மிகப்பெரிய கொடுமை இது. நான் இயக்கிக்கொண்டிருக்கிற 'சாமி 2' படத்தோட ஷூட்டிங் திருநெல்வேலியில்தான் நடந்துகொண்டிருந்தது. பக்கத்துல இருக்கிற தூத்துக்குடியில ஏற்பட்ட கலவரத்தைப் பார்த்ததுல இருந்து, எங்களால ஒண்ணுமே செய்ய முடியலை. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு சென்னைக்குத் திரும்பிவிட்டோம்!'' என்று கண்கலங்கிப் பேசினார் ஹரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!