துரோகிப் பட்டியலில் எடப்பாடி பேரும் சேர்க்கப்படும்..! அரசுக்கு எதிராக பொங்கிய போராட்டக்காரர்கள்

பிச்சை எடுத்து பெறவதல்ல உரிமை, போராடிப் பெருவதே உரிமை. அப்படி அறவழியில் போராடியவர்கள் மீது எதிரி நாட்டுக்காரன் சுடுவதைப்போல சுட்டுக் கொண்டிருக்கிறது தமிழக அரசு. இந்த ஏதேச்சதிகாரப் போக்கை அப்படியே விட்டால் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று சேலம் ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு இளைஞர் இயக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பல்வேறு முற்போக்கு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு காவல்துறைக்கும், மத்திய, மாநில அரசுகளுக்கும் ஆக்ரோஷமாக குரல்களை எழுப்பினார்கள். காவல்துறை ஒரு கூலிப்படை என்றும், அரசு இயக்கும் ரோபோ என்றும் கூறினார்கள்.

``மோடியும், எடப்பாடியும் மக்களுக்கான அரசாக இல்லாமல் நம் நாட்டில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட்டுகளுக்கான அரசாக நடத்தி வருகிறார்கள். ரவுடிகள் முதலாளிகளிடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு கொலை செய்வதைப் போல கொலை செய்திருக்கிறார்கள் காவல்துறையினர். வாகனத்தின் மீது ஏறி காக்கை, குருவிகளைச் சுடுவதைப் போல சுட்டு வீழ்த்தி இருக்கிறது காவல்துறை.  

நாம் என்ன ஆயுதத்தை எடுக்கிறோமோ அதை எதிரிகளே தீர்மானிக்கிறார்கள் என்ற மாவோவின் கூற்றுப்படி காவல்துறை வன்முறையை தூண்டியதால் போராட்டக்காரர்களும் வன்முறைக்கு தள்ளப்பட்டார்கள்'' என்றார் மனித உரிமை ஆர்வலர் பூமொழி.

அடுத்து பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் வினாயகமூர்த்தி, ''பேய் அரசாண்டால் பிணம் திண்ணும் சாத்திரங்கள் என்பதை போல சாத்தான்கள் மோடியும், எடப்பாடியும் அரசால்வதால் பிணம் குவித்திருக்கிறார்கள். தமிழ் இலக்கியங்களில் கட்டப்பொம்பனை காட்டிக் கொடுத்த துரோகி எட்டப்பனை எழுதுவதுபோல இனி தமிழ் இலக்கியத்தில் துரோகி எட்டப்பன் மட்டுமல்ல எடப்பாடி பேரும் சேர்க்கப்படும்.

இதுமட்டுமல்ல இனி தமிழக மக்கள் போராட்டக் களத்துக்கு வர வேண்டும். தமிழ்நாட்டில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, சாகர் மாலா, 8 வழிச் சாலை என வேட்டைக் காடாக மாற்ற இருக்கிறார்கள். இதை எதிர்க்க மக்கள் தயாராக வேண்டும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!