`கடவூர் பகுதியில் நிலவில் உள்ள பாறைகள்!' - ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யத் தகவல்

  பாறைகள்

``உலகத்தில் எங்கும் இல்லாத அரிய வகை கற்கள் மற்றும் பாறைகள் கரூர் மாவட்டத்தில் உள்ள கடவூர் மலையில் உள்ளன. நிலவில் இருக்கும் பாறைகள்கூட இந்த மலையில் உள்ளன" என்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.  சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் குமார் தலைமையிலான ஆராய்ச்சிக் குழுவினர் கரூர் மாவட்டம், கடவூர் மலையில் உள்ள பாறைகளை ஆராய்ச்சி செய்தனர்.

ஆய்வுக்குப் பின் பேசிய பேராசிரியர் குமார், ``உலகம் உருவானபோது காணப்பட்ட பாறைகளில் ஒன்றான அனோர்த்தாசைட் கடவூர் பகுதியில் அதிக அளவில் காணப்படும் பாறைகளுக்கு ஒப்பானதாகும். கடவூர் பகுதியில் உள்ள அரிய வகை பாறைகள் நிலவில் உள்ளன. மலைகளில் உள்ள பாறைகள் ஆர்க்கியன் கால வகைகளாகும். இவை 2.5 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிந்தையது. மற்றொன்றான ப்ரோட்டியா கால பாறைகளில் ஒன்றான அனோர்த்தோசைட் பாறைகளில் கனிமங்கள் உள்ளன. இந்தப் பாறைகள் 850 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உள்ளது. இதில் மனிதப் பயன்பாட்டுக்குத் தேவையான அனைத்து உபகரணங்களும் இரும்பு போன்ற பொருள்கள் தயாரிக்கவும் பயன்படுத்தலாம். டைட்டானியம் பாறைகள் இதோடு இணைந்து காணப்படுகின்றன. அயன் டைட்டானியம் சேர்ந்த குவார்ட்ஸ், பெல்ஸ்பார் வகையான பாறைகள் கொடிக் கொடியாக கடவூருக்குள் காணப்படுகின்றன. குவார்ட்ஸ் என்பது சிலிக்கா, கணினி சிப் தயாரிக்க தேவைப்படுகிறது. பெல்ஸ்பார் பீங்கான் தயாரிக்க உபயோகப்படுகிறது. மேலும், கடவூரில் உள்ள பச்சைக்கல் பல வகையான ரத்தினக்கற்கள் உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ளன. ஒரு சில மட்டும் கிடைக்கிறது. பெரில் அக்குமரியான் என அழைக்கப்படும் ரத்தினக் கற்கள் கடவூர் பகுதிகளில் கிடைக்கின்றன.

இந்தப் பகுதி மிகவும் வறண்ட பகுதியாகும். நிலத்தடி நீரை பொதுமக்கள் சேமிக்க வேண்டும். குளம், குட்டைகள் மற்றும் பொன்னியாறு அணையை தூர்வாரும் பட்சத்தில், இங்கே நிலத்தடி நீர் மட்டம் உயரும். இந்தப் பகுதியில் நிலத்தடி நீரை உயர்த்த சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், இன்பசேவா சங்கம் மற்றும் வானகம் ஆகியவை இணைந்து குடிநீர் சம்பந்தமாக மேம்பாட்டுப் பணிகள் செய்து வருகின்றன. கடவூர் பகுதியில் மழை பெய்யும். அதற்கான முழு முயற்சிகளையும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் செய்து வருகிறது" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!