`பிரதமராகும் வாய்ப்பு தேடி வந்தது!' - மாநாட்டில் நெகிழ்ந்த சந்திரபாபு நாயுடு

`பிரதமராகும் ஆசை எனக்கு இல்லை. மாநில நலனுக்காக அந்தப் பதவியை மறுத்துவிட்டேன்' எனக் கூறியிருக்கிறார், தெலுங்குதேசம் கட்சித் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு. 

சந்திரபாபு நாயுடு பிரதம

(PC-DC)

தெலுங்குதேசம் கட்சியின் மாநாடு, நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக முதல்வர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், `கடந்த நான்கு ஆண்டுகளாக ஹைதராபாத் வளர்ச்சி அடைந்துவருகிறது. டெல்லி மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு மட்டுமே மத்திய அரசு அதிகளவிலான நிதியை ஒதுக்கீடுசெய்கிறது. தெலுங்கானாவுக்கும் ஆந்திராவுக்கும் மத்திய அரசின் உதவிகள் கிடைப்பதில்லை.

மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தும் வழங்கப்படவில்லை. நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து, மோடி தலைமையிலான பா.ஜ.க செயல்பட்டுவருகிறது. இதேபோல, சில கட்சிகளும் 2019-ல் நடக்கும் தேர்தலில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் அல்லாத மூன்றாவது கட்சியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். தெலுங்கு தேசக் கட்சியின் ஆதரவு இல்லாமல் மத்தியில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது' எனப் பேசிக்கொண்டிருக்கும்போது, கூட்டத்தில் பங்கேற்ற தொண்டர்கள், 'வருங்கால பிரதமர் சந்திரபாபு நாயுடு'  எனக் கோஷம் எழுப்ப, அதற்கு அவர் `1996-ம் ஆண்டில் பிரதமராகும் வாய்ப்பு வந்தது. ஆனால், அதை நான் நிராகரித்துவிட்டேன். பிரதமராகும் ஆசை எனக்கு இல்லை' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!