காடுவெட்டி குரு கவலைக்கிடம்!

காடுவெட்டி குரு

சென்னையில் அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காடுவெட்டி குரு கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

உடல் நலம் பாதிக்கப்பட்டு, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள குருவுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, தினமும் மருத்துவமனைக்குச் சென்று, பார்த்துவருகிறார். பா.ம.க நிறுவனர் ராமதாஸ், மருத்துவமனைக்குச் சென்று குருவைப் பார்த்ததுடன், அவருக்கு அளிக்கப்பட்டுவரும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் விசாரித்தார்.

அப்போலோ மருத்துவமனை மருத்துவர்களுடன் அன்புமணி நடத்திய ஆலோசனையின்போது, காடுவெட்டி குருவுக்கு ஏற்பட்டுள்ள சுவாசப் பிரச்னையைத் தீர்க்க, மூச்சுக்குழலில் அறுவைசிகிச்சை செய்து சுவாசிக்கச்செய்யும் டிரக்கியாஸ்டமி (Tracheostomy) சிகிச்சை செய்யலாம் என்று தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அவருக்கு அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர் பாபு மனோகர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் இந்த சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்தனர். இந்த நிலையில் காடுவெட்டி குரு உடல் நிலை குறித்து தவறான தகவல் பரவியது.

இது குறித்து பாமக தரப்பில் கேட்டபோது, காடுவெட்டி குருவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்தது. தற்போது அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. மருத்துவர்கள் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்" என்று முடித்துக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!