மதுரையில் அரசுப் பேருந்து கண்ணாடி உடைப்பு! மர்ம நபர்கள் கைவரிசை

லவரத்தைத் தூண்டியதாகக் கூறி 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . துப்பாக்கிச்சூடு  சம்பவம் நடந்து மூன்று நாள்கள் ஆகியும் இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்ப தூத்துக்குடி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

அரசு பேருந்து

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து, தமிழகத்தில் இன்று முழு அடைப்பு நடந்துவரும் நிலையில்,  மதுரையில் அரசுப் பேருந்துமீது மர்ம நபர்கள் கல்வீசியதால் பதற்றம் ஏற்பட்டது.

தூத்துக்குடியில் இயங்கிவரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி,  கடந்த 22-ம் தேதி நடைபெற்ற 100-வது நாள் போராட்டம், யாரும் எதிர்பார்க்காத வகையில் கலவரமாக மாறியது. அப்போது போலீஸார் நடத்திய  துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கலவரத்தைத் தூண்டியதாகக் கூறி 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர் . துப்பாக்கிச் சூடு  சம்பவம் நடந்து நான்கு நாள்கள் ஆகியும், இன்னும் இயல்புநிலைக்குத் திரும்ப தூத்துக்குடி மக்கள் சிரமப்பட்டுவருகின்றனர். ஆனாலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்துவருகிறது.

மத்திய, மாநில  அரசுகளையும் காவல் துறையினரையும் பொதுமக்கள் கடுமையாகச் சாடிவருகின்றனர். மதுரையில், அரசுப் பேருந்துமீது மர்ம நபர்கள் கல்வீசியதால் பதற்றம் ஏற்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்தது மடப்புரம் நோக்கி புறப்பட்ட  அரசுப் பேருந்தின்மீது, மதுரை தெற்கு மாட வீதி சந்திப்பில் பேருந்து சென்றபோது, மர்ம நபர்கள் கல் வீசினர். இதனால், பேருந்தின் முன்புறம் இருந்த கண்ணாடிகள் முழுவதும் சேதமானது. இந்தச் சம்பவம்குறித்து திடீர் நகர் பகுதி காவல்நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து  பேருந்துமீது கல்வீசிய மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!