'பாம்பு கடித்தது தெரியவில்லை'- பாலூட்டியதால் பறிபோன இரண்டு உயிர்கள்

தன்னை பாம்பு கடித்தது தெரியாததால், தன் குழந்தைக்குப் பாலூட்டியதால், இருவரும் பலியான சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாம்பு

இதுகுறித்து இன்ஸ்பெக்டர் விஜய் சிங் கூறுகையில், `உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகர் மாவட்டம், மாண்டலா கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை நேற்று நள்ளிரவில் பாம்பு கடித்துவிட்டது. ஆனால், அவருக்கு அது தெரியவில்லை. விஷம் உடல் முழுவதும்  பரவியது. 

தூக்கத்தில் இருந்து எழுந்த அவர், தனது மூன்று வயது குழந்தைக்குப் பாலூட்டியதாகத் தெரிகிறது. அதன்பின், இருவரும் மயங்கி விழுந்ததாகக் குடும்பத்தினர் தெரிவித்தனர். குழந்தை மற்றும் தாய் படுத்திருந்த அறையில் பாம்பு ஊர்ந்து செல்வதைக் கவனித்த குடும்பத்தினர், பாம்பை அடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அது தப்பிவிட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட தாயும் குழந்தையும்  மருத்துவமனை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டும், அவர்கள் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்தனர்' என்றார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!