வெளியிடப்பட்ட நேரம்: 00:00 (26/05/2018)

கடைசி தொடர்பு:00:00 (26/05/2018)

ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு - சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட மத்திய அரசு! 

ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்ய சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது என மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். நூறு நாள் அமைதியாக நடந்த போராட்டம் கடந்த 22-ம் தேதியன்று போர்க்களமாக மாறியது. போராட்டக்காரர்கள் தடையை மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இட்டதால், காவல்துறையினர் அவர்கள் மீது துப்பாகிச்சூடு நடத்தினர். மேலும், கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் தொடர்ந்து இரண்டு நாள் துப்பாகிச்சூடு நடத்தினர். இதில், மொத்தம் 13 பேர் உயிரிழந்தனர். 

இந்நிலையில், ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அவர், `ஸ்டெர்லைட் ஆலைக்கான அனுமதியை முந்தைய அரசு கொடுத்துள்ளது. ஸ்டெர்லைட் தொடர்பான கோப்புகளை ஆய்வு செய்ய தொடங்கிவிட்டோம். அலைபற்றி முழுமையான தகவல்களை திரட்டச் சுற்றுச்சூழல் துறை அதிகாரிகளுக்கு ஸ்டெர்லைட்டை ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடத்தப் போராட்டத்தில் 13 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது' என்றார்.